Friday, October 31, 2014

உலக சாதனை செய்த அஜீத்தின் 'என்னை அறிந்தால்'.


விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படம் ஏற்படுத்த முடியாத டிரெண்டை அஜீத்தின் படத்தலைப்பு ஏற்படுத்திவிட்டதாக ஃபேஸ்புக், டுவிட்டரில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான 'கத்தி' படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்தது. பெரும் பரபரப்புடன் நல்ல வசூலை கத்தி படம் கொடுத்த போதிலும் டுவிட்டர் டிரெண்டில் கத்தி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அஜீத்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் பேரை கேட்டதுமே நேற்று டுவிட்டர் அதிர்ந்தது. ஊடகங்களும், அஜீத் ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொடுத்த டுவிட்டுகளால் எங்கு பார்த்தாலும் டுவிட்டரில் ஒரே அஜீத் மயமாக இருந்தது.

மேலும் மதியத்திற்கு மேல் 'என்னை அறிந்தால்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதும் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த 'என்னை அறிந்தால்' சில நிமிடங்களில் முதலிடத்தை பிடித்தது. ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதற்கே அஜீத் ரசிகர்கள் அந்த சம்பவத்தை உலக அளவில் கொண்டு வந்துவிட்டார்கள் என்றால் படம் வெளியான என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் செய்யாத சாதனையை அஜீத்தின் படத்தலைப்பும், பர்ஸ்ட் லுக்கும் செய்து விட்டதாக இன்னும் கருத்துக்கள் பதிவாகிக்கொண்டு இருக்கின்றது. இந்த பரபரப்பில் ஊடகங்கள் அனைத்துமே இதுவரை போற்றி வந்த கத்தியை மறந்துவிட்டன என்பதுதான் உண்மை.


No comments:

Post a Comment