Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, December 20, 2014

விஜய் தான் நம்பர் 1! ஆதாரத்துடன் நிருபித்த ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் முதல் இடத்திற்கான போட்டி விஜய், அஜித்திடம் கூட இருக்குமா? என்று தெரியவில்லை, ஆனால், அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விஜய் தான் தென்னிந்தியாவில் அதிக இணையத்தில் தேடிய நபர் என்று ஒரு கருத்து கணிப்பு கூறியது. இதற்கு அஜித் ரசிகர்கள் பலர் பல விஜய் இருக்கின்றனர்(எ-கா) முரளி விஜய், விஜய் சேதுபதி, அருண் விஜய் என்று கூறினர்.

ஆனால், கூகுளில் ஆக்டர் விஜய் என்றே தேடப்பட்டதில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார் என்று ஆதாரத்துடன் ரசிகர்கள் நிருபித்து உள்ளனர்.


Friday, December 19, 2014

விஜய் ஒரு கடின உழைப்பாளி! மனம் திறந்த மிஷ்கின்

விஜய் ஒரு கடின உழைப்பாளி! மனம் திறந்த மிஷ்கின்

தமிழ் சினிமாவில் மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர் மிஷ்கின். இவர் தன் ஒவ்வொரு படைப்பிலும் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்.

இவர் தன் பிசாசு படத்திற்காக டுவிட்டரில் ரசிகர்களிடம் உரையாடிய போது நடிகர் விஜய் பற்றி கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர் ‘விஜய் ஒரு கடின உழைப்பாளி, அவருடன் கண்டிப்பாக ஒரு படத்திலாவது பணியாற்றுவேன்’ என்று கூறியுள்ளார்.


Wednesday, December 17, 2014

விஜய்யின் அரசியல் குறித்து ரசிகர்கள் கூறிய பதில்?


விஜய் சமீபத்தில் தான் கத்தி படத்தின் வெற்றி விழாவை நெல்லையில் கொண்டாடினார். இதில் மிகவும் ஆவேசமாக பேசினார். இதுபோல் விஜய் இதற்கு முன்பு எங்கும் பேசியது இல்லை.

நெல்லையில் வந்து இறங்கிய விஜய் தன் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்துள்ளார். அவர்களிடம் அரசியல் குறித்து ஒரு படிவம் கொடுத்து கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் பெரும்பாலும் மோடியுடன் கூட்டணி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


மீண்டும் அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்! 2014 கருத்து கணிப்பு


ஒவ்வொரு வருடம் பிறக்கும் போது தவறாமல் ஒரு கருத்து கணிப்பு வந்துவிடும். அந்த வகையில் இந்த வருடம் தமிழில் அதிகம் இணையத்தில் தேடிய நடிகர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தை நடிகர் விஜய் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தான் சூர்யா, அஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக கத்தி படத்தின் சர்ச்சையும் ஒன்று என கூறப்பட்டுள்ளது. சென்ற வருடமும் விஜய் தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Monday, December 15, 2014

ஐ திருவிழா நாளை ஆரம்பம்! ருசிகர தகவல்


ஐ படம் இந்திய சினிமாவிற்கே ஒரு மைல் கல் தான். ஷங்கரின் பிரமாண்ட திறமை, விக்ரமின் கடின உழைப்பு என படத்தை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து யூ-டியுபில் 90 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் நாளை வரும் என தெரிவித்துள்ளனர்.

இந்த ட்ரைலர் 2 நிமிடம் ஓடும் என கூறப்படுகிறது. டீசர் சாதனையை ட்ரைலர் முறியடிக்க வாழ்த்துக்கள்.


அஜித் அடுத்த சூப்பர் ஸ்டாரா? மீண்டும் சர்ச்சை கிளப்பிய பத்திரிக்கை


சூப்பர் ஸ்டார் பட்டதிற்கு தமிழ் சினிமாவில் என்றும் போட்டி தான். இதில் முதலிடத்தில் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இதில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று ரஜினியின் அறிவிக்கப்பட்டத வாரிசு, அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் தான், ரஜினியின் அனைத்து நல்ல குண நலன்களும் அவரிடம் உள்ளது.

மேலும் அவரை போலவே நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவரின் ஆரம்பம், வீரம் படமும் ரூ 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. என்று அந்த ஆர்டிகல் முடிகிறது. ஆனால், இந்த பதிப்பு அஜித்தின் எதிர் தரப்பை மிகவும் சீண்டி பார்த்துள்ளது.


‘லிங்கா’ படத்தின் 3 நாள் இமாலய வசூல் – முழு விவரம்!…



‘லிங்கா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால், அதெல்லாம் நமக்கு எதற்கு சூப்பர் ஸ்டாரை பார்த்தால் போதும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.

பாலிவுட் படங்களுக்கு நிகராக லிங்கா வெளிவந்த மூன்றே நாட்களில் ரூ 100கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் ரூ 55 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ 25 கோடியும் வசூல் செய்துள்ளது.

மேலும் ஓவர்சிஸில் ரூ 20 கோடியும் ஆக மொத்தம் 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து மீண்டும் நான் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று நிருபித்து உள்ளார் சூப்பர் ஸ்டார்.


ரசிகர்கள்தான் எனக்கு முதலாளி – நடிகர் விஜய்!

ரசிகர்கள்தான் எனக்கு முதலாளி – நடிகர் விஜய்!

பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, ‘கத்தி’ திரைப்படத்தின் 50-ஆவது நாள் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசியது: வெற்றி- தோல்வி இடையே மிகவும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. கடமையைச் சரியாகச் செய்தால் வெற்றி. கடமைக்காகச் செய்தால் தோல்வி. கத்தி படத்தைப் பொருத்தவரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸýம், அவருடன் இணைந்து நானும் கடமையை மிகவும் சரியாகச் செய்ததால் படம் வெற்றியைத் தந்துள்ளது.

கால்பந்து விளையாட்டில் ஒருவர் கோல் போட வேண்டுமானால், 10 பேரின் உழைப்பும் அவசியம். அதே நேரத்தில் மேலும் 11 பேர் கோல் போடவிடாமல் தடுப்பார்கள். அதையெல்லாம் தாண்டி சாதிப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது. எந்தச் செயலிலும் முயற்சியைவிட அதிகமாக எதிர்ப்பு இருக்கும். அதைக் கண்டு அஞ்சாமல் உறுதியோடு செயல்பட வேண்டும். உலகில் நல்லவர்கள் துன்பப்பட்டாலும் அனுபவத்தைக் கற்றுத் தருவார்கள். ஆனால், கெட்டவர்கள் நன்றாக வாழ்ந்து மறைந்தாலும் அவமானத்தைத் தாங்கிச் செல்வார்கள். அனுபவத்தைத் தருபவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.
குடும்பத்தைக் கவனிக்காமல் எனது ரசிகராக மட்டும் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான். கத்தி திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஏழை விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்கினார். விழாவில் படத் தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆனந்த், விஜய் ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ரவிராஜா, கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.


Sunday, December 14, 2014

தமிழ் முன்னணி நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் ....


தமிழ் முன்னணி நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் ....

2014ம் ஆண்டின் நிலவரப்படி நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் இது…

நடிகர்கள்

ரஜினிகாந்த் – 25 கோடிக்கு மேல்
சூர்யா – 22-25 கோடி
கமலஹாசன் – 20 – 25 கோடி
அஜீத் – 20-23 கோடி
விஜய் – 19 – 22 கோடி
விக்ரம் – 12-15 கோடி
விஷால் – 6-8 கோடி
ஆர்யா – 5-7 கோடி
தனுஷ்- 5-6 கோடி
சிவகார்த்திகேயன் – 4-6 கோடி
சிம்பு – 4-5 கோடி
ஜெயம்ரவி – 3-5 கோடி
ஜீவா – 3-5 கோடி
விஜய் சேதுபதி – 2-5 கோடி

நடிகைகள்

நயன்தாரா – 2-2.5 கோடி
அனுஷ்கா – 1.5-2 கோடி
இலியானா – 1.5-2 கோடி
ஸ்ருதி ஹாசன் – 1 கோடி
சமந்தா – 80லட்சம் – 1 கோடி
காஜல் அகர்வால் – 60 லட்சம்-70 லட்சம்
தமன்னா – 60 லட்சம் – 80 லட்சம்
ஹன்சிகா – 40 லட்சம்-50 லட்சம்

இந்த விபரமெல்லாம் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள், பெற்றுக் கொடுக்கும் ஹீரோக்களின் மானேஜர்கள் ஏரியாவில் திரட்டியவை. கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம். பெரிய வித்தியாசம் இருக்காது. சில நடிகர்கள் சம்பளத்தை குறைத்து ஏரியா வாங்கிக் கொள்வதுண்டு. உதாரணமாக சூர்யாவும், விஷாலும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டு தெலுங்கு ரைட்சை வாங்கிக் கொள்வார்கள்.



Saturday, December 13, 2014

ரஜினி, அஜித்தை முந்திய விஜய் - பிரபல சர்வே

ரஜினி, அஜித்தை முந்திய விஜய் - பிரபல சர்வே

போர்ப்ஸ் இந்தியா என்ற நிறுவனம் சமீபத்தில் இந்தியா முழுவதும் நடத்திய டாப் 100 பிரபலங்கள் 2014 லிஸ்ட்டை வெளியிட்டது.

இதில் சல்மான் கான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், எம். எஸ். டோனி மற்றும் அக்ஷய் குமார் முதல் ஐந்து இடத்தில உள்ளனர்.

தென் இந்தியாவை பொறுத்த வரை விஜய் 41வது இடத்திலும் , ரஜினி 45வது மற்றும் அஜித் 51வது இடத்திலும் வகிக்கின்றனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் தங்கள் நடிகர் தென்னிந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளார் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.


Sunday, November 2, 2014

விஜய்யின் புதுப்படம்..! புது தகவல்கள்….!

கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இப்படம் முழுக்க முழுக்க ஃபேன்டஸி ரகத்தைச் சேர்ந்தது என கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போது இப்படம் முழுவதும் ஃபேன்டஸி படம் கிடையாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
படத்தின் பெயர் மாரீசன் என்றும் சொல்லப்பட்டது. அதையும் தற்போது மறுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து சிம்புதேவனின் யூனிட்டைச் சேர்ந்தவர்களிடம் கேட்டால்.. புதிய தகவல்கள் சொல்கிறார்கள்.

இப்படத்தில் முதலில் ஸ்ரீதேவியும், சுதீப்பும் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது, பின்னர் அவர்கள் இருவரும் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது.
ஆனால், ஸ்ரீதேவியும், நான் ஈ புகழ் சுதீப்பும் நடிப்பது உண்மைதான் என்கிறார்கள்.
ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகள் மட்டும்தான் படத்தில் ஃபேன்டஸியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
முழுப்படமும் விஜய் நடித்த கில்லி படத்தைப்போல் மாஸ் படமாக இருக்குமாம்.

இப்படத்தில் வரும் வில்லன் பாத்திரம், கில்லி படத்தின் பிரகாஷ் ராஜ் கேரக்டர் பேசப்பட்டதைவிட அதிகமாக பேசப்படுமாம். இந்த வேடத்தில் நடிப்பவர் கன்னட நடிகர் சுதீப்.
பிரகாஷ்ராஜ் பெரிய சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சுதீப்பை கமிட் செய்து உள்ளனர்.
நவம்பர் 10ஆம் தேதி முதல் ஈசிஆரில் உள்ள உத்தண்டியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை செட் ஒன்றில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் பங்குபெறும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கவிருக்கிறார்களாம்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் சில இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


Saturday, November 1, 2014

நடிப்பு தவிர நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா எல்லாம் என்ன செய்றாங்க தெரியுமா?

சினிமாவில் மரத்தை சுற்றி டூயட் பாடும் நாயகிகள்… கவர்ச்சி பதுமைகளாய் உலா வரும் நாயகிகள் பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை பத்திரமாக வேறு தொழில்களில் பயன்படுத்துகின்றனராம். முன்பெல்லாம் அம்மா, அப்பா, கார்டியன் கைகளில் கொடுத்துவிட்டு கடைசியில் நடிகைகள் ஏமாந்து நின்றது ஒருபுறம் நடந்துள்ளது. ஆனால் இன்றைக்கோ பல நாயகிகள் தாங்களின் சம்பளத்தை பாதுகாப்பாக பத்திரமாக முதலீடு செய்துவிடுகின்றனராம். அனுஷ்கா, நயன்தாரா, நமீதா, தேவயாணி என பல நாயகிகள் இதுபோல சைடு பிசினஸ் செய்கின்றனராம். பூர்ணிமா பாக்கியராஜ், சரண்யா பொன்வண்ணன், ஹன்சிகா ஆகிய நடிகைகள் தங்களின் கலைத்திறமையை பயன்படுத்தி புடவை அழகு படுத்துதால், ஓவியம் வரைதல் என உபயோகமான முறையில் பொழுதை கழிக்கின்றனராம்.

சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளார் அனுஷ்கா. ரியல் எஸ்டேட் பிசினஸ்தான் இப்போதைக்கு அனுஷ்காவிற்கு பிரதானமாம்

குட்டித் தீவு ஒன்றை வாங்கி அதை டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றியுள்ளாராம் நயன்தாரா. கொச்சியில் அவர் வாங்கியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவு பற்றிதான் இப்போது பரபரப்பான பேச்சாம்.

நமீதாவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும் சம்பாதித்த பணத்தை கொண்டு நிலத்தை வாங்கி ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கிவிட்டார்.

சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் அரசியலில் பரபரப்பாக இருந்தார் விந்தியா. இப்போது நமீதா பாணியில் இவரும் ரியல் எஸ்டேட் பிசினசில் இறங்கிவிட்டாராம்.

நடிகை தேவயாணி தன் மகள்களின் பெயரில் டப்பிங் தியேட்டர் கட்டியுள்ளாராம். சீரியல் நடிப்போடு இப்போது இதுவும் நல்ல வருமானம் தருகிறதாம்.

நடிகைகள் பூர்ணிமா பாக்கியராஜ், சுதா சந்திரன் ஆகியோர் புடவை டிசைனிங் செய்து விற்பனை செய்கின்றனராம். நடிகை சரண்யா பொன்வண்ணன் காஸ்டியூம் டிசைனிங் வகுப்பு எடுக்கிறாராம்.

அழகு நடிகை ஹன்சிகா 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்து எடுத்து பராமரித்து வருகிறார், அதோடு ஓவியம் வரைந்து கண்காட்சியும் நடத்துகிறார். நடிப்பை என் தொழிலாகவும், ஓவியம் வரைவதை பொழுதுபோக்காகவும் வைத்து இருக்கிறேன் என்கிறார் ஹன்சிகா.


Friday, October 31, 2014

உலக சாதனை செய்த அஜீத்தின் 'என்னை அறிந்தால்'.


விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படம் ஏற்படுத்த முடியாத டிரெண்டை அஜீத்தின் படத்தலைப்பு ஏற்படுத்திவிட்டதாக ஃபேஸ்புக், டுவிட்டரில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான 'கத்தி' படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்தது. பெரும் பரபரப்புடன் நல்ல வசூலை கத்தி படம் கொடுத்த போதிலும் டுவிட்டர் டிரெண்டில் கத்தி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அஜீத்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் பேரை கேட்டதுமே நேற்று டுவிட்டர் அதிர்ந்தது. ஊடகங்களும், அஜீத் ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொடுத்த டுவிட்டுகளால் எங்கு பார்த்தாலும் டுவிட்டரில் ஒரே அஜீத் மயமாக இருந்தது.

மேலும் மதியத்திற்கு மேல் 'என்னை அறிந்தால்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதும் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த 'என்னை அறிந்தால்' சில நிமிடங்களில் முதலிடத்தை பிடித்தது. ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதற்கே அஜீத் ரசிகர்கள் அந்த சம்பவத்தை உலக அளவில் கொண்டு வந்துவிட்டார்கள் என்றால் படம் வெளியான என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் செய்யாத சாதனையை அஜீத்தின் படத்தலைப்பும், பர்ஸ்ட் லுக்கும் செய்து விட்டதாக இன்னும் கருத்துக்கள் பதிவாகிக்கொண்டு இருக்கின்றது. இந்த பரபரப்பில் ஊடகங்கள் அனைத்துமே இதுவரை போற்றி வந்த கத்தியை மறந்துவிட்டன என்பதுதான் உண்மை.


Wednesday, October 29, 2014

அஜித் வழியை பின்பற்ற தொடங்கிய விஜய்; உண்மை என்ன?????


தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித்-விஜய் தான். இதில் அஜித் எப்போது தன் படங்கள் வருகிறது என்றால் அது பற்றி மீடியாக்களில் பேசுவதை விரும்ப மாட்டார்.ஆனால், மரியாதை காரணமாக மீடியா நண்பர்களை அழைத்து விருந்து வைப்பார். இதற்கு விஜய் அப்படியே தலை கீழானவர்.தற்போது இவரும் அஜித் வழியை பின்பற்ற ஆரம்பித்து விட்டாராம். நேற்று நடந்த கத்தி படத்தின் சக்சஸ் மீட்டில் (பத்திரிக்கையாளர் சந்திப்பு) மீடியாக்களில் பேச மாட்டேன் என்று முதலிலேயே கூறிவிட்டார்.பின் எல்லோரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டார் 


மலையாள நடிகர்களை எரிச்சல் அடைய செய்த விஜய்!


விஜய் எப்போதும் மிக எளிமையாகவும், அனைவருடனும் அன்பாக பழக கூடியவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கத்தி, கேரளா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.மேலும் கத்தியின் வசூல் விநியோகஸ்தர்களை வருத்தமடைய செய்ய வில்லையாம். கண்டிப்பாக இன்னும் சில தினங்களில் லாபம் வந்து விடும் என்கிறார்கள்.ஆனால் கேரளாவில் விஜய்யின் வளர்ச்சி சில நேரடி மலையாள நடிகர்களின் படங்களையே ஓரங்கட்டுகிறதாம். இதனால் இவர் மேல் மிகுந்த கோபத்தில் உள்ளார்களாம் சேட்டான்கள்.